2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வாளுடன் இளைஞன் கைது

Niroshini   / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை, சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்று (06), பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, வாளை கையிருப்பில் வைத்திருந்த குற்றாச்சாட்டில் 25 வயது இளைஞன் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை, வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.


அண்மையில் பொன்னாலையில் பிறிதொரு பகுதியிலும் இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள் ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .