2022 ஜனவரி 22, சனிக்கிழமை

யாழில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

Editorial   / 2021 நவம்பர் 29 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (29) அதிகாலை  3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு  தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் கீழ், கொட்டடி பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலின் பிண்ணனி தொடர்பான  மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட  விடயமல்ல  ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X