2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

யாழில் சிறுவர் கடத்தல்: கைதானவர் காணாமல் போனவர்

Freelancer   / 2023 மே 16 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் இன்றைய தினம் காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்  குறித்த விடயம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .