2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

போதைப் பொருள் பாவனை தடுப்பு கலந்துரையாடல்

Freelancer   / 2022 நவம்பர் 26 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (25) இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி சுரேந்திரகுமாரன், யாழ் மாநகர மேஜர் வி.மணிவண்ணன், முப்படையினர், பொலிஸார், சுகாதார துறை அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரி, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் என பல்வேறுபட்ட தரப்புகளும் பங்கேற்றனர்.

போதைப்பொருள் பாவனையை தடுத்தல், போதைப்பொருள் பாவனையாளர்களை மீட்டெடுத்தல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X