2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன் 

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியார்  தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம், இன்று (16) காலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளம்தம்பதியினர், தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக, நேற்று (15) மாலை 5.30 மணியளவில் அங்கு சென்று  தங்கியிருந்தனர்.

 இந்நிலையில், இன்று காலை வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே, இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில், கட்டைக்காட்டை சேர்ந்த வினோத் என்பவர் படுகாயங்களுக்கு உள்ளாகி,   கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வனர்த்தத்தில் மனைவிக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. அவர்களது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதம் அடைந்துள்ளது.


ஆலய முகப்பு இடிந்து விழுந்ததிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வனர்த்தினால், அப்பிரதேச மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .