2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

யாழில் 3 நாள் வேட்டையில் பலர் சிக்கினர்

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து 10 கிராமிற்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருட்களும்  மீட்கப்பட்டன.

இதில் கொழும்பில் இருந்து யாழ் வந்து, யாழ் நகரப்பகுதியில் தங்கியிருந்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த கெப்பிட்டிகோலாவ பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை அவரிடம் இருந்து 2 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டன.

மேலும் யாழ் குருநகர் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த 38 வயதுடைய நபர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிட்டவேளை அவரிடம் இருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

யாழில் இருந்து கொழும்பிற்கு சென்று ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனைக்காக வாங்கி வந்த நபர் தொடர்பில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பொம்மைவெளி பகுதியில் உள்ள குறித்த நபரின் வீடு மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைப்பொருள் தடுப்புபிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் இடப்பட்ட சோதனையில் அவரின் உடமையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக மேலும் 5 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த யாழ் நீதவான் பீற்றர் போல் அவர்கள் மேலும் 5 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்ள மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் படி பொலிஸாரிற்கு அனுமதியளித்தார்.

 மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்புபிரிவினரின் நடவடிக்கைகளினால் போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து போதை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தற்போது குறித்த பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .