2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

புதிய பீடாதிபதி தெரிவு

Niroshini   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக, வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ். ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய பீடாதிக்கான தேர்தல், நேற்று (13) காலை நடைபெற்றது.

இதன் போது, மருத்துபீட, பீட சபை உறுப்பினர்களிடையியே இடம்பெற்ற வாக்கெடுப்பில், வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் 22 வாக்குகளைப் பெற்று 4 மேலதிக வாக்குகளால், பீடாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கொவிட் - 19 தடுப்புச் செயலணியின் இணைப்பாளராக பதவி வகிக்கும் வைத்தியக் கலாநிதி இ. சுரெந்திரகுமாரன், மருத்துவ பீட சமுதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.

இவர் சமுதாய மருத்துவத்துறையின்  தலைவராக 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .