2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

உரப் பிரச்சினை தொடர்பில் சுமந்திரனிடம் எடுத்துரைப்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

சிறுப்பிட்டி பகுதி விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஒன்று, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் தவநாயகத்தின் இல்லத்தில், இன்று (11) நடைபெற்றது.

இதன்போது, உரம் மற்றும் கிருமிநாசினிகள் இல்லாது, விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு செல்வது தொடர்பில், சிறுப்பிட்டி பகுதி விவசாயிகள், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதற்கு தகுந்த தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என,சுமந்திரன் எம்.பியிடம் சிறுப்பிட்டி விவசாய சம்மேளனம் கோரிக்கை விடுத்தது.

அத்துடன் உர பிரச்சினை தொடர்பில், யாழ். மாவட்டத்தில், எதிர்வரும் நள்;களில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்

இந்தச் சந்திப்பில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், உப தவிசாளர் மகாலிங்கம் கபிலன் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .