2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

’இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு ஒத்துழைப்போம்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

எமது நிலங்கள் இரசாயன பசளைகளுக்கு இசைவாக்கம் பெற்றுள்ளன. உடனடியாக அசேதனப் பசளைக்கு ஒரே இரவில் மாறுவது என்பது விவசாயிகளால் முடியாத காரியம் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், தங்களுக்கு வேண்டிய கிரிமிநாசினியை உடனடியாக வழங்குமாறும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவோமெனவும், அவர் கூறினார்.

வலிகாமம் கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், புத்தூர் மற்றும் உரும்பிராய் கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாக, நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாங்கள் எப்பொழுதுமே இரசாயன பொருள்களை விரும்புபவர்கள் அல்ல எனவும் தமது நிலங்கள் இரசாயன பசளைகளுக்கு இசைவாக்கம் பெற்றுள்ளன எனவும் உடனடியாக அசேதனப் பசளைக்கு ஒரே இரவில் மாறுவது என்பது விவசாயிகளால் முடியாத காரியம் எனவும் கூறினார்..

தெற்கிலே இப்படியான ஆர்ப்பாட்டத்தை உடனடியாக செய்ய முடியாத நிலையில், தாங்கள் வடக்கில் இவ்வாறான பாரிய ஆர்ப்பாட்டங்களை ஒவ்வொரு கிராம கமநல சேவை நிலையம் ஊடாக முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த சுமந்திரன், தொடர்ச்சியாக இவ்வாறான கண்டன ஆர்ப்பாட்டங்களை தாங்கள் மாகாணம் வாயிலாக மேற்கொள்ள உள்ளோம் எனவும் கூறினார்.

'இரசாயனம் எவ்வாறு எங்களுடைய உடலை சின்ன சின்னதாக அரித்து கொள்கின்றது என்று எங்களுக்கு தெரியும். அது மாற்றப்பட வேண்டும். ஆனால் ஒரே இரவிலே இதனை மாற்ற முடியாது. இது ஆட்சியாளருக்கும் தெரிந்த விடயம்' என்றும், அவர் கூறினார்.

தாங்கள் மாறவேண்டும் என்றால் அதற்கு ஒரு காலம் வழங்க வேண்டும் எனதம் தெரிவித்த அவர், அதனை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும் எனவும்; கூறினார்.

'எனவே, எங்களுக்கு வேண்டிய உரத்தை உடனடியாக வழங்குங்கள். எங்களுக்கு வேண்டிய கிரிமிநாசினியை உடனடியாக வழங்குங்கள். இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். அது எங்களுக்கு நல்லது அனைவருக்கும் நல்லது' எனவும், சுமந்திரன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X