2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பஸ் சாரதியை தாக்கியவர் பிணையில் விடுவிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 26 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலை பஸ் சாரதியை தாக்கிய சந்தேக நபர்கள் இருவரையும் தலா 250,000 ரூபாய் பெறுமதியான பிணையில் செல்ல, ஊர்காவற்றுறை நீதவான் ஜெ. கஜநிதிபாலன் நேற்று (25) அனுமதி வழங்கினார். வழக்கு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (24) காரைநகர்  போக்குவரத்து சபை பஸ் சென்று கொண்டிருந்த பொழுது,  மோட்டார் சைக்கிளில் வீதியில் நடுவில் நின்று இருவர் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, பஸ்ஸின் சாரதி, பஸ்ஸூக்குள்  இருந்த வண்ணம் அவர்களின் தலைக்கவசத்தைப் பறித்து, அவர்களுக்கு  அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அந்த இளைஞர்கள் பஸ்ஸூக்குள் ஏறி, சாரதியை தாக்கியதுடன் நடத்திநரின் பயணச்சீட்டு கருவியையும் சேதப் படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில், பஸ் சாரதியால் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம், காரைநகரை சேர்ந்த 32, 36 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X