2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

புதிய அரசியலமைப்பு வந்தவுடன் யாழில் அனைவருக்கும் வீடுகள்-அமைச்சர் விமல்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

புதிய அரசியலமைப்புத்திட்டம் அமுலுக்கு வந்தவுடன் யாழ்ப்பாணத்தில் வீடற்ற சகல மக்களுக்கும் இலங்கை அரசு வீடுகளைக் கட்டிக்கொடுத்து அவர்களின் நீண்டகாலக்குறையைத்தீர்த்து வைக்கும் என தேசிய வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வீடமைப்புக் கடன் வழங்கும் வைபவத்தின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், போரினால் சிதைந்து போன யாழ்.மக்களின் வாழ்வை பழைய நிலைக்கு கட்டியெழுப்ப வேண்டுமானல் அவர்கள் அனைவரும் குடியிருக்க வீடுகள் அவசியம். ஆயினும் கடந்த கால அனர்த்தங்களினால் பல மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார, அரசியல் நிலையை ஸ்திரப்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை எமது அரசாங்கம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவந்துவிடும். இந்நிலையில் வீடுகளை இழந்து நிற்கும் மக்கள் அனைவருக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

இந்த வைபவத்தின் போது 20 பேருக்கு 2 இலட்சம் ரூபா வீதமும், 5 பேருக்கு 1 இலட்சம் ரூபா வீதமும், 40 பேருக்கு காணிகளும் அமைச்சரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .