Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
'நிக்கொட்' நிறுவனத்தின் யாழ். மாவட்ட அலவலகத்தை மூடுமாறு பொருளாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக 'நிக்கொட்' நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்.மாவட்டத்தில் இயங்கிவரும் குறித்த நிறுவனம், யாழ்ப்பாணத்தில் மட்டும் 30 மில்லியன் செலவில் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் குறித்த நிறுவனத்தின் யாழ். மாவட்ட அலவலகம் மூடப்படவேண்டும் என்றும் இதனூடாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் என்றும் பொருளாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இங்கு கடமையாற்றுபவர்களில் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago