2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் மொபெட் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யுமாறு அறிவிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொபெட் ரக மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவோர், அவற்றை உடனடியாக பதிவுசெய்து கொள்ளவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண தலைமையக காவல்துறை பொறுப்பதிகாரி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில் பதிவு செய்து கொள்ளப்படாத மொபெட் ரக மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பதிவுசெய்யப்படாத மொபெட் ரக மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி, குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளமையை அடுத்தே  இந்த பதிவு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .