2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

உரிமை கோரப்படாத பொருட்கள் ஏல விற்பனைக்கு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பொதுமக்களால் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட நிலையில், யாழ். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சான்றுப்பொருட்கள் எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் எஸ்.எஸ்.ராஜசிங்கம் அறிவித்துள்ளார்.

ஏல விற்பனைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பொதுமக்கள் இப்பொருட்களைப் பார்வையிடலாமெனவும் அவர் கூறினார்.

அத்துடன் ஏலத்தில் விடப்படும் பொருட்களுக்கான ஏலப் பெறுமதியை பணமாக உடன் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதுடன், அன்றையதினம் பொருட்கள் அனைத்தும் நீதிமன்ற வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டுமெனவும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .