2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

பலாலி காவலரணில் குண்டு வெடிப்பு; இராணுவச் சிப்பாய் காயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பலாலி இராணுவத் படைத் தலைமையகத்தை அண்டிய காவலரணில் குண்டொன்று வெடித்ததில்  காவல் கடமையிலிருந்த இராணுவச் சிப்பாயொருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலாலி படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

காலியைச் சேர்ந்த டபிள்யூ.எஸ்.சம்பத் பெரேரா (வயது 19) என்பவரே காயமடைந்துள்ளார்.

இவரது முகம், கை, கால் மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .