2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து வீதிகளுக்கும் ' காப்பற் '

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட அனைத்து வீதிகளும் காப்பற் முறையில் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முதல் கட்டமாக நாளை சனிக்கிழமை காலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருடன் இவ் விடயம் தொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக  தெரிவித்த அவர் யாழ்.மாநகர சபையினால் காப்பற் வீதி அமைப்புக்காக முதல் கட்டமாக 8 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பணிகள் அனைத்தும் 03 வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .