Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(கவிசுகி)
	
	நெடுந்தீவில் கடந்த ஆறாம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்திய மீனவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 
	
	அவரது சகோதரரான லூமன், யாழ். பொலிஸாருக்கு அளித்த மரண விசாரணையின்போது இந்திய மீனவரான சேவியர் விக்ரர்சின் என்பவரின் சடலமென அடையாளம் காட்டினார். 
	
	இலங்கை கடற்படையினரின் பெரிய படகுக்கு அருகில் எனது சகோதரரான சேவியர் விக்ரர்சின் என்பவரின் படகு காணப்பட்டதென்றும் மரண விசாரணையின்போது அவர் கூறினார். 
	
	இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரர்சின் என்பவரே (வயது 41) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். 
	
	இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
	
	நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள இந்திய மீனவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ். குடாநாட்டிற்கு தமிழ்நாடு இராமேஸ்வரத்திலிருந்து இந்திய மீனவக் குடும்பமொன்று வந்துள்ள நிலையிலேயே, மேற்படி சடலத்தை அடையாளம் காட்டினர். 
	
	இதற்கிடையில், காணாமல் போன ஏனைய மூவரையும் வடகடல் பகுதியில் தேடும் நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago