George / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு வழங்கப்படும் இலவச கண்வில்லைகள், எதிர்காலத்தில் உரிய பிரதேச செயலாளர் ஊடாக முதியவர்களுக்கு வழங்கப்படும் என செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த இலவச கண்வில்லைகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலரால் பூரணப்படுத்தப்பட்டு உரிய மருத்துவ அத்தாட்சிப் பத்திரங்களுடன் பிரதேச செயலாளர் ஊடாக, முதியோர்களுக்கான தேசிய செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்படிவங்களின் அடிப்படையில், மாவட்ட செயலகங்களில் உள்ள மாவட்ட சமூக சேவைகள் அலுவலர்கள் ஊடாக கண்வில்லைகள் முதியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டு வரையில் இந்த நடைமுறை நடைமுறையில் இருந்தது. மாவட்ட ரீதியில் மத்திய மயப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் பல சந்தர்ப்பங்களில் கண்வில்லை தேவைப்படும் உரிய முதியோருக்கு தேவையான நேரத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர்களிடம் இலவச கண் வில்லைகளை நேரடியாக வழங்கி, விரைவாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
11 minute ago
35 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
35 minute ago
52 minute ago