Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 25 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அனைத்து இணங்களையும் ஒன்றினைக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 'யாழ்ப்பாண இசை விழா 2011', இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3 தினங்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 23 வகையான நாட்டுப்புற கலைகள் மேடையேற்றப்படவுள்ளன.
சரித்திர பூர்வமான யாழ் மண்ணில் இரண்டு ஆண்டுகளுக்கு நிகழும் வகையில் ஒழுங்குப் படுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாண இசைவிழா பார்வையாளர்களுக்கு கிராமிய பாரம்பரிய அறிவை தருவதோடு வேறுப்பட்ட கிராமிய கலைவடிவங்களின் கலை நுட்பத்தை செயன்முறை விளக்கம் மூலம் அறியக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் கலைஞர்களுடன் இந்தியா, தென்னாபிரிக்கா, நோர்வே, நேபாளம், பலஸ்தீனம், ஆகிய சர்வதேச நாடுகளில் இருந்து வரும் கலைஞர்களின் கிராமிய வடிவங்களும் இடம்பெறவுள்ள இந்த யாழ்பாண இசை விழாவினை நோர்வே உயர்ஸ்தானிகராலயம், யு.எஸ்.எய்ட். அமைப்பு, சேவா லங்கா மற்றும் அருஸ்ரீ கலையகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
கலாசார ரீதியான நாட்டுப்புற கலைவடிவங்களின் கொண்டாட்டமாக அமையப்பெறவுள்ள இந்த இசைவிழாவின் மூலம் 30 ஆண்டுகளுக்கு மேலாக போரின் பிடிக்குள் சிக்கி இருந்த மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Pix By :- Kushan Parhiraja
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago