2022 ஜனவரி 22, சனிக்கிழமை

குறிஞ்சாக்கேணி விபத்து; மற்றுமொரு சிறுமி மரணம்

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர், இன்று (28) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா என்ற 6 வயதுச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம்,  திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

சடலத்தை, உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு, விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X