2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

நீரிழிவிற்கு மருந்தாகும் உமிழ்நீர்..!

Piriyadharshini   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

Dr.நி.தர்ஷனோதயன்

MD (S) (Reading)  

 

நீரிழிவு நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம் என்று தானே நினைக்கின்றீர்கள்.!!!!

நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான் கணையத்திலிருந்து  இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகின்றது. உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.

'வாழ்வதற்காக  உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர் ' அதனால்தான் அவர்கள் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சுவைத்து உண்டார்கள். இதனால் அவர்கள் உண்ணும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டார்கள் நம் முன்னோர்கள். அவர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததாலோ என்னவோ  ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்கள்.

அவர்கள் உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் அவர்களுக்கு ஏற்படவில்லை.  'தூண்டல், துலங்கல்' என்ற விதியின்படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது.

நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர். தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம். அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு உண்ணும் வேகமும் அதிகரித்துவிட்டது.

'வாழ்க்கைக்கான உணவு என்ற மனநிலை மாறி, உண்பதுவும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் '  உணவை ரசித்து, ருசித்து உமிழ்நீர் கலந்து உண்ணாமல் அவசர  அவசரமாக வாயில் போட்டு விழுங்குகின்றோம். நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவை உண்பதால் இன்சுலின் சுரப்பு ஏற்படாது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சீனியாகவே இரத்தத்தில் தங்கிவிடும். நாளடைவில் அது நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் தன்மைக்கு மாறிவிடுகிறது.

நீரிழிவிற்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான். எனவே, நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுடனும் உமிழ்நீர் சுரப்பை அதிகரித்துக் கொள்வதற்காக பொறுமையுடன் சுவைத்து உண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் நீர் அல்லது தேநீர் அருந்தும் போது கூட உமிழ்நீர்  சுரக்கும் தன்மையை அதிகரிக்கும் வகையில் அருந்துவது சிறந்தது.

நீரிழிவு நோயை  உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்தின் மூம் குணமடையச் செய்வோம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X