2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

சிறுமிக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர். எம். றிபாஸ்

திருகோணமலை, பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, மூச்சுத்திணறல் காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு (30) அனுமதிக்கப்பட்டார்.

அச்சிறுமிக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விடயத்துக்குப் பொறுப்பான வைத்தியதிகாரி தெரிவித்தார்.

சிறுமிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் காணப்பட்டதாகவும் பணடோல் மாத்திரைகளைப் பாவித்து வீட்டிலேயே சிறுமியை தங்க வைத்திருந்ததாகவும் இதனையடுத்து மூச்சுத்தணறல் ஏற்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, சிறுமியின் தாயாருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தாயாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .