Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
பப்பாசி பழத்தில் என்டி ஒக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
பப்பாசி பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வரும்போது நமது ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சருமத்தின் நிறத்துக்கு மற்றும் வடிவத்துக்கு உதவுகிறது. அத்துடன் முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
பப்பாசி பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக் காமல் இருக்க உதவுகிறது. எனவே இதனால் நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
பப்பாசி பழத்தில் கரோட்டீனாய்டுகள், ப்ளோனாய்டுகள், வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.
மேலும் பப்பாசி பழத்தில் கண்ணின் ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின் ஏ உள்ளது. இவை கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
பப்பாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை போக்க வல்லது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025