2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அசேதனப் பசளை கோரி விவசாயிகள் கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட்

தங்களுக்கான அசேதனப் பசளையின் தேவையை வலியுறுத்தி, திருகோணமலை, கந்தளாய் பிரதேச விவசாயிகள், கந்தளாய், போட்டங்காடு சந்தியில் இருந்து கந்தளாய் குளம் வரை இன்று (17) கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

“எங்களுக்கு அசேதனப் பசளை வேண்டும்” மற்றும் “விவசாயத்துக்கான பசளையை, காலத்துக்கு ஏற்றவாறு வழங்கு” போன்ற கோஷங்களை இதில் கலந்துகொண்ட விவசாயிகள் எழுப்பினர்.

இந்கக் கவனயீர்ப்பில் 42 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .