2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

பேராறு குலனி ஆற்றுப் பாலம் நிர்மாணிப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

ஜனாதிபதியின் ஐயாயிரம் பாலங்கள் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கந்தளாய் பேராறு குலனி ஆற்றின் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளன.

கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதேச சபை உறுப்பினரின் ஏற்பாட்டில், கந்தளாய் பேராறு குலனி ஆற்றின் பாலத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஆரம்ப நிர்மாண பணிகளை, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான  கபில நுவான் அத்துக்கோரல, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். ஜவாஹிர் ஆகியோரால்  இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இப்பாலம், இரண்டு கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

இப்பாலம் நீண்ட காலமாக ஒற்றை வழிப் பாலமாக காணப்பட்டுகின்றது. இப்பாலத்தில் மோட்டார் சைக்கிளில்  செல்லுவோர் பல அசௌகரியங்களை மேற்கொண்டு வந்த நிலையிலே, கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினரின் முயற்சியால் வாகனங்கள் செல்லும் அளவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .