2022 ஜூலை 02, சனிக்கிழமை

பேரனை கண்டுப்பிடித்து தாருங்கள்: பாட்டி

Editorial   / 2022 ஜனவரி 21 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

தனது பேரனை கண்டுப் பிடித்து தருமாறு பாட்​டி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சூர நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தர்மவதி வயது 72) பாட்டியே,   உணவு, உறக்கமின்றி அழுது புலம்புகிறார்.

மாணிக்கராசா மதுசாந் வயது (21) என்ற இளைஞன் வறுமை நிலமை காரணமாக கொழுமபபு வெள்ளவத்தைக்கு தனது உறவினர்களுடன் கூலி வேலைக்காக 09.01.2022 ஆம் திகதியன்று சென்றுள்ளார்.மன நலம் பாதிக்கப்பட்டவரான இவர் சிகிச்சை பெற்றுவந்ததினால் ஓரளவு நோய் குறைவடைந்து காணப்பட்டுள்ளது.

பொங்கல் தினத்திற்கு மறுநாளான 15.1.2022 ஆம் திகதியன்று வெளியில் சென்றவேளை காணமல் போயிருந்தார்.இவரை காணவில்லையென தேடியபோது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து 16.1.2022 ஆம் திகதி இரவு மீட்டுள்ளனர். பின்னர் அவரை இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல  முற்சக்கரவண்டியில் ஏற்றுவதற்கு முயற்சித்தபோது அவர்களை தள்ளிட்டு ஓடிச்சென்று  மறைந்துள்ளதாக அவரை கொழுப்பிற்கு அழைத்துச் சென்றவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவரை கண்டு பிடித்து தருமாறு வெள்ளவத்தைச் பொலிஸ் நிலையம் மற்றும் திருகோணமலைஅலி ஒலுவ பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அவ்விளைஞன், 2 வயதாக இருந்த போது,  அவரது தாய், நோய்வாய் பட்டிருந்த நிலையில்,  உயிரிழந்துள்ளர்.இதன்போது பேரப்பிள்ளையான மதுசாந்தை அவரது பாட்டியே பாராமரித்து வந்துள்ளார்.

இவரை  கண்டவர்கள்,  0766794093,0766794093 மற்றும் 0771607517. ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்கின்றனர். 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .