2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் திராட்சை சாறு

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராட்சை சாறு இரத்தத்திலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தக்குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.

அசைவ உணவு உண்ணாதவர்கள் அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.

திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர, இரத்த விருத்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும்  நல்லது.

மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது  நல்ல  பலனளிக்கும்.

இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக் அமிலத்தையும் நீக்கும்.

உடம்பில் உள்ள கொழுப்பை நீக்க உதவுகின்றது. திராட்சைச் சாறு உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவினால்  கருவளையங்கள் வராமல் தடுக்கலாம்.

சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும் வெப்பத்தால் வரும் கட்டியிலிருந்து பாதுகாப்பு  கிடைக்கும்.

கருப்பு திராட்சை பழத்தின் சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த்தொற்றுக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

தினமும் உடற்பயிற்சி செய்து விட்டு, ஒரு டம்ளர் திராட்சை சாறு எடுத்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது.

திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X