2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

உயிர் காக்கும் திரவம் - இளநீர்

Piriyadharshini   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

Dr.நி.தர்ஷனோதயன்

MD (S) (Reading) 

 

இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக பறிக்கப்படுகின்றது.  

தேங்காய் என்பது பழமெனவும் கருதப்படுகின்றது. பழங்களில் நடுவேயுள்ள ‘எண்டோஸ் பெர்ம்’ என்ற பகுதியே பழம் பெரிதாகி சதைப் பற்றுடன் வளரக் காரணம். இந்த ‘எண்டோஸ் பெர்ம்’ தோங்காயில் திரவவடிவில் காணப்படுகின்றது.

இளந்தேங்காயிலிருந்து இளநீர் பெறப்படுவதால், இளந்தேங்காய் நீர் மருவி இளநீர் எனப் பெயர் பெற்றுள்ளது. இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை பானமாகும். வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க சிறந்த பானமாகும்.  

இளநீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதைத் தாண்டி இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக்கூடியதுடன், கோடைக்காலம் வந்துவிட்டால், வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தைத் தணிக்க  இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள்  தொண்டைக்கு இதமாக இருந்தாலும் சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக்கூடிய பானம் இளநீர் மாத்திரமே.  

மருத்துவ பயன்கள்:  

  • ​ஒரு இளநீருடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால், உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் பலம் பெறுவதற்கும் சிறந்தது.
  • மருந்துகளை பயன்படுத்தும் காலத்தில் நோயாளிகள் இளநீர்  அருந்தினால் மருந்து உடலில் சேர்ந்து  நன்கு பலன்தரும்.
  • இயற்கைத் தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர் ஒரு முழுமையான சத்துள்ள நீராகும்.
  •  வெப்பம் அதிகமாகவுள்ள இடங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் அதிகளவில் வளரும் தென்னை மரங்கள் உஷ்ணம் அதிகமுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு இயற்கையே தந்த அருமருந்து  இளநீர் என ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. 
  • இளநீர் சமிப்பாட்டுத் தொகுதியின் சீரான இயக்கத்திற்கு தேவையான வெப்பத்தை மாத்திரம் உடலுக்கு வழங்கி, உடலிலுள்ள அதிக வெப்பத்தை வெளியேற்றுகின்றது.
  • கோடைக்காலத்தில், உடல்வெப்பம் அதிகரிப்பதனால் பலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்த இளநீர் மிகவும் சிறந்தது.  
  • அம்மை நோய், வயிற்றுப் போக்கு போன்றவை  ஏற்படும்போது உடலில் உள்ள நீர்சத்து குறையக்கூடும் இதனை சீராக்க தினமும் இளநீரைப் பருகுவது நல்லது.   
  • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும்,வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை நீக்குவதற்கும் இளநீரிலுள்ள இனிப்புத் தன்மை உதவுகின்றது.
  • உடல் உஷ்ணத்தை தணிக்கும் இளநீரை வெயில் காலங்களில் மட்டும் அருந்தாமல் வாரத்திற்கு ஒருமுறையாவது அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X