Editorial / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரிசி கழுவிய நீரை அழகு பராமரிப்புகளில் வருகிறது. பயன்படுத்தப்பட்டு அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
அரிசி கழுவிய நீரை சிறிய கொட்டன் துணியை பயன்படுத்தி முக்கியெடுத்து முகத்தை துடைப்பதால், அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினைபுரியும்.
வெயிலால் சருமம் வரண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும் அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவுவதால் என்றும் இளமையாக இருக்கலாம்.
கூந்தல் அதிக வரட்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால், அரிசி கழுவிய நீரால் கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் காணப்படும்.
அரிசி கழுவிய தண்ணீரை குழந்தைகளை குளிக்க பயன்படுத்துவதால், அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.
அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
1 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
27 Jan 2026