2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

உப அலுவலகம் அமைக்கவும்

Princiya Dixci   / 2021 ஜூலை 27 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

கிண்ணியா பிரதேசத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் உப அலுவலகம் ஒன்றை அமைத்துத் தருமாறு, நீர்ப்பாசன அமைச்சரிடம் கிண்ணியா ஷூரா சபையால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எமது பிரதேசத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்கள் அதிக அளவில் காணப்பட்ட போதிலும், நீர்ப்பாசன திணைக்களத்தின் உப அலுவலகமொன்று இந்தப் பிரதேசத்தில் இல்லாமை ஒரு குறைபாடாக  இருப்பதாகவும் கிண்ணியா ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை சாதகமான முறையில் பரிசீலனை செய்யுமாறு, நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நீர்ப்பாசனத்தை மேம்படுத்தி, விவசாயத்துறையையும் அது சார்ந்த ஏனைய தொழில்களையும் வலுவூட்டி, தேசிய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கோடு, இந்த நீர்ப்பாசன திணைக்களத்தின் அலுவலகம் இங்கு அமைக்கப்பட வேண்டும் எனவும் கிண்ணியா ஷூரா சபை கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .