2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாவக் காட்டுப்பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை செவ்வாய்க்கிழமை (13) முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேகர் நபர் (வயது 37) ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்குவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

இதன்போது, கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்படும்   உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .