2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் 56 பாடசாலைகளில் டெங்கொழிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
 
அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நேற்று வியாழக்கிழமை கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட 56  பாடசாலைகளில் அனுஷ்டிக்கப்பட்டது.
 
இதற்கிணங்க கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான வைபவம் நடைபெற்றது.
 
அதிபர் ஏ.ஜே.றூமி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மாணவிகளால் டெங்கு நுளம்பு பெருகக் கூடுமென்று இனங்காணப்பட்ட பாடசாலை சுற்றுப்புறச் சூழல் துப்பரவு செய்யப்பட்டது.
 
பாடசாலை ஆசிரியர்களும் இச்சிரமதானப் பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .