2021 ஜூலை 28, புதன்கிழமை

அனல் மின் நிலையப் பகுதி தவிர்ந்த சம்பூரின் ஏனைய பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றத் தீர்மானம்

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                   (எல்.தேவ்)

சம்பூர் பகுதிகளில் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் இடங்கள் தவிர்ந்த அதனை சூழவுள்ள பகுதிகளில் மக்களின் விருப்பத்திற்கமைவாக அவர்களை குடியமர்த்துவதற்கான காணிகளை வழங்குதல் அத்துடன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்தல், தற்காலிக தங்குமிடங்களை அமைத்துக் கொடுப்பதுடன் நிரந்தர வீடுகளுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளல் போன்ற பல முக்கிய முடிவுகள் இன்று நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் எடுக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தங்கியுள்ள மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மீள்குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரமவுக்குமிடையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்பின், முகாம்களிளுள்ள மக்களைச் சந்தித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குறிப்பிட்ட காணிகளைப் பார்வையிட்டு விருப்பத்தினைத் தெரிவித்த பின்னர், காணிகள் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுவதுடன் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன், மூதூர் பிரதேச செயலாளர் எஸ்.செல்வநாயகம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு,நவரெட்ணபுரம், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்களை கடந்த புதன்கிழமை சந்தித்த  மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களிடம்  ஆளுநருடன் பேசிய பின்னர் மீள் குடியேற்றம் குறித்த முடிவுகள் தெரிவிப்பதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

alt

alt

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .