2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண தேசியபாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுககொடுக்க கோரிக்கை

Kogilavani   / 2010 நவம்பர் 11 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் மத்திய கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு அசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கல்வி அமைச்சுஇ தேசிய பாடசாலைகளின் பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுக்கும் அதே வேளை ஆசிரியர்களையும் நியமிக்கவேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருக்கோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. அதிபர் மா. இராசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி கலந்துக்கொண்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு சில தேசிய பாடசாலைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. தேசிய பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் சமமின்மை நீக்கப்பட வேண்டும். எல்லா பாடசாலைகளும் மாணவர்களுக்கானதே. சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்க பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை  நிலவுகின்றது. தேசிய பாடசாலைகளும் இம் மாகாண பாடசாலைகளே. இங்கு ஆசியர் பற்றாக்குறைகள் களையப்பட வேண்டும்.

என அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .