2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

தேங்காய் பறித்த இளைஞன் மரத்திலிருந்து வீழ்ந்து சுயநினைவு இழப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, கிண்ணியா பெரியாற்றுமுனைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது அம்மரம் முறிந்து வீழ்ந்ததால் அந்த இளைஞர் சுயநினைவை இழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த வேளையில் தென்னை மரத்தின் நுனிப்பகுதி முறிந்து கீழே வீழ்ந்தது. இந்த நிலையிலேயே மேற்படி இளைஞரும் கீழே வீழ்ந்து தனது சுயநினைவை இழந்துள்ளார்.

சுயநினைவை இழந்த மேற்படி இளைஞர் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பெரியாற்றுமுனையைச் சேர்ந்த தேங்காய் பறிப்பதை தொழிலாகக் கொண்ட முஹம்மத் சப்றீன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு கீழே வீழ்ந்து சுயநினைவை இழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .