2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

விதை வீக்கம் தொடர்பில் அவதானம் தேவை

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆண்களின் ஆணுறுப்பு விதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். ஆமாம், வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது சிறுவர்களாக இருந்தாலும் சரி, சிலருக்கு அவர்களின் விதைகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் உருவாகும் வலியினால் அவர்கள் துடி துடித்துப் போய் விடுவதை நாம் அவதானித்து இருக்கின்றோம். ஏன் எமக்கும் அவ்வாறான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்த வகையில் விதைகளில் ஏன் வீக்கம் ஏற்படுகின்றது, அதனை நாம் எப்படி தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 
 
ஆண்களின் விதைகளில் வீக்கங்கள் இரண்டு வெவ்வேறான முறைகளில் ஏற்படுகின்றன. ஆணுறுப்பு விதைகள் தனது இயல்பான தோற்றத்திலிருந்த விலகி தானாகவே முறுக்கமடைவதால் விதைக்கு தேவையான இரத்தோட்டம் தடைப்படுவதால் ஏற்படும் வலி, அடுத்தது விளையாடும் போதோ சைக்கிள் ஓட்டும் போதோ அல்லது ஏதேனும் விபத்தொன்றின் மூலம் விதைகள் அடிப்பட்டு அதனால் ஏற்படும் வலி என இரண்டு வகைப்படும்.  
 
அந்த வகையில், விதைகள் இயல்பாக முறுக்கடைவதால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி என்பது கொஞ்சம் ஆபத்தான ஒரு நிலையாகும். ஆதனால் விதைகளுக்கான இரத்தோட்டம் தடைப்படுகின்றது. அதனை நீங்கள் கவனிக்காமல் விடுகின்ற சந்தர்ப்பங்களில் விதைகள் அழுகி முற்றாக இல்லாமல் போக கூடிய ஆபத்தான நிலை கூட ஏற்படும். 
 
எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக நீங்கள் வைத்தியரை நாடுவது கட்டாயமாகும். 12 அல்லது 18 மணித்தியாலங்கள் தாமதித்தாலும் உங்கள் ஆணுறுப்பு விதைகளை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். காரணம் இரத்தோட்டம் தடைப்பட்டு விதைகள் முற்றாக பாதிப்படைந்ததன் பின்னர் அதனை சத்திரசிகிச்சையின் மூலம் வெட்டி அகற்றுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியாது. 
 
குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்தியரை நாடினால் உங்கள் விதைகளில் ஏற்படும் முறுக்கல் நிலையை சத்திரசிகிச்சையின் மூலம் இலகுவாக சரி செய்து உங்கள் விதைகளுக்கான இரத்தோட்டத்தை ஏற்படுத்தி அதனை காப்பாற்றிக் கொள்ளவும் முடியும். 
 
அடுத்ததாக விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல் முறையற்ற ரீதியில் மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஆண்களின் விதைகள் அடிப்பட்டு வீக்கமடைந்து வலி ஏற்படுதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரும்பாலான ஆண்களுக்கு இந்த அனுபவங்கள் அதிகம் ஏற்பட்டிருக்கும். 
இவ்வாறான சிறு சிறு விபத்துக்களால் விதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளால் பெரும்பாலும் பாராதூரமான பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதில்லை. அதனை வலியை குறைக்கின்ற சில மருந்துகளாலும் சிறிய அளவிலான சிகிச்சைகளாலும் மிகவும் இலகுவாக குணப்படுத்திக் கொள்ள முடியும். 
 
ஆனால், விதை திருப்பிக் கொள்வதால் ஏற்படும் விதை வீக்கம் மற்றும் வலி தொடர்பில் தான் நீங்கள் அதிகம் கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியமானதாக கருதப்படுகின்றது.
 
எனவே, ஆண்கள் உங்கள் விதைகளில் ஏற்படும் வீக்கம் வலி வேதனைகள் மற்றும் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், அப்படி தொடர்ச்சியாக உங்கள் விதைகளில் வீக்கமும் வலியும் இருந்தால் அதனை உடனடியாக வைத்தியரிடம் காட்டி அவரின் ஆரோசனையை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என்பதே எமது கருத்தாகும்.
 
-தம்பி

  Comments - 0

  • madhanbms@gmail.com Monday, 08 February 2016 07:36 PM

    thanks sir very nice

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X