2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

‘சந்திரனுக்கு சுற்றுலா செல்ல தயார்’

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன் முறையாக சஅழைத்துச் செல்ல இருப்பதாக, சந்திரனுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவிருப்பதாக அறிவித்தது. இதற்காக மிகப்பெரிய விண்கலத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், குறித்த விண்கலம் மூலமாக மனிதர் ஒருவரை சந்திரனுக்கு அனுப்பவுள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் பயணிக்கவிருக்கும் குறித்த நபர், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மில்லியனரான யுசாகு மேசாவா ஆவார். இவர் ஜப்பான் நாட்டில் மிகப் பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.

ஸ்பேஸ் எக்ஸின் இந்த அறிவிப்பால் யுசாகு மேசாவா, உலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அத்துடன், இவர் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட உள்ளார். இந்நிலையில், யுசாகு மேசாவா எனும் இணையத்தளத்தில் இதுதொடர்பில் பக்கத்தையும் தொடங்கியுள்ளார். அதில் சில அதிரடி திட்டங்களையும், சந்திரனுக்கு பயணம் செய்வது குறித்தும் தகவல்களை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .