2023 மே 30, செவ்வாய்க்கிழமை

தேர்தலில் குதித்துள்ள திரையுலக பிரபலங்கள்

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடவு்ள இந்தியப் பிரபலங்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளன.

நஸ்ரத் ஜஹான்:

நடிகை மற்றும் மொடலான நஸ்ரத் ஜஹான், முதன் முறையாக 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

ராஜ் சக்ரோபோர்டி இயக்கத்தில் ‘ஷோட்ரு’ படத்தின்மூலம் திரையுலக்கு அறிமுகமானார்.

இந்தியா, கல்கத்தாவிலுள்ள பவனிபூர் கல்லூரியில் பி.கொம் படித்துள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

மிமி சக்ரபோர்டி:

ஆரம்பத்தில் மொடல் அழகியாக இருந்த மிமி சக்ரபோர்டி, 2008ஆம் ஆண்டு முதல் பெங்காலி சினிமா உலகில், பிரபல நடிகையாக உள்ளார். இவர் திரிணாமுல் கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலம் ஜதாவ்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

பிரகாஷ் ராஜ்:

தென்னிந்திய நடிகர் பிரகாஷ் ராஜ், ஜனவரி முதலாம் திகதி அரசியலில் களமிறங்கியதாக  அறிவித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட உள்ளார்.

அவரின் நெருங்கிய நண்பரும் பிரபல கன்னட பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவரால் கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, மோடி தலைமையிலான மத்திய அரசை பிரகாஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஷில்பா ஷிண்டே:

தொலைக்காட்சி நடிகையான இவர், கடந்த பெப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின்னர், நடப்பாண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், மக்களவைத் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

அர்ஷி கான்:

ஷில்பா ஷிண்டேவைத் தொடர்ந்து அர்ஷி கானும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மஹாராஷ்டிரா காங்கிரஸின் துணைத் தலைவராக அர்ஷி செயல்பட்டு வருகிறார். மும்பையில் இவர் போட்டியிட இருக்கிறார்.

தேவ்:

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், கதையாசிரியர் என பல்வேறு பரிமாணங்களைக் இருக்கும் இவர், பெங்காலி மொழி படத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலம் கட்டல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .