Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமான நிலையில், அவருக்கான புகழாரங்களும் மரியாதைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், 4 தசாப்தகாலமாக நீடித்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவராகப் புகழப்படுகிறார். அதேபோல், அணுவாயுதங்கள் மூலமான அழிவு ஏற்படும் ஆபத்துக் காணப்பட்ட நிலையில், அவ்வாபத்தையும் அவர் மிகவும் குறைத்திருந்தார்.
இந்நிலையில், சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மிகைல் கோர்பச்சேவ், "எனது நினைவுகளில் பல, அவரோடு இணைந்து காணப்படுகின்றன" எனத் தெரிவித்தார். தாங்களிருவரும் இணைந்து, பல மாற்றங்களைப் பல ஆண்டுகளில் மேற்கொள்ள முடிந்தது என அவர் தெரிவித்தார்.
எச்.டபிள்யூ. புஷ்ஷின் மகனான ஜோர்ஜ் டபிள்யூ புஷ், 43ஆவது ஜனாதிபதியாக இருந்ததோடு, அவரின் இன்னொரு மகனான ஜெப் புஷ், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஆகுவதற்காகப் போட்டியிட்டிருந்தார். அதன் காரணமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் புஷ் குடும்பத்துக்குமிடையிலான உறவில் முரண்பாடு ஏற்பட்டதெனக் கருதப்பட்டது.
ஆனால், எச்.டபிள்யூ. புஷ்ஷைப் புகழ்ந்மத ஜனாதிபதி ட்ரம்ப், "உயர்ந்த தரத்தைக் கொண்ட மனிதர்" என்று அவர் குறிப்பிட்டார். அத்தோடு, நாளை மறுதினம் புதன்கிழமை, தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், புஷ்ஷைத் தோற்கடித்து ஜனாதிபதியான பில் கிளின்டன், "சேவை, அன்பு, நட்பு ஆகியவற்றைக் கொண்ட அதிசிறந்த நீண்ட வாழ்க்கை"யை நினைவுகூர்வதாகத் தெரிவித்தார்.
ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளான ஜிம்மி கார்ட்டர், பராக் ஒபாமா ஆகியோரும், புஷ்ஷின் மறைவுக்கு அனுதாபம் வெளியிட்டனர்.
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago