2022 ஜூலை 07, வியாழக்கிழமை

ஜெயாவின் இறுதிச் சடங்குக்கான செலவு

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குக்கு, தமிழக அரசின் சார்பில், 10 மில்லியன் (1 கோடி) இந்திய ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, தெரிய வந்துள்ளது.

மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த, சையது தமீம் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான செலவு விவரம் கேட்டு, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு அதிகாரிக்கு, கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, பொதுப்பணித் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், 'ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக, 99.33 இலட்சம் இந்திய ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதென்றும் 'அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான செலவை, தமிழக அரசு செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .