2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

சவூதி மன்னர் காலமானார்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 23 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஸிஸ்  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வைத்தியசாலையில் காலமானதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இவரது ஒன்றுவிட்ட சகோதரரான  சல்மான், மன்னர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 வயதான அப்துல்லாஹ் பின் அப்துல்லாஸிஸ் நுரையீரல் தொற்றுக்கு உள்ளான நிலையில், பல வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இவர் 2005ஆம் ஆண்டில் முடிவுக்குரிய மன்னராக அரியணைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .