2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

விருதிலிருந்து டேன் ஒஸ்போர்ன் நீக்கம்

Kogilavani   / 2015 மே 31 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டின் பிரபல தந்தைகான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகின் புகழ்பெற்ற கட்டழகரான டேன் ஒஸ்போர்ன், அப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

'வன்முறையாளர்' என ஆண்டின் தொடக்கத்தில் இவரது பெயர் ஊடகங்களில் வெளியானதால் இவர் இப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு பிள்ளைகளின் தந்ததையான டேன் (வயது 23)  ஆண்டின் தொடக்கத்தில் மனைவியுடன் ஏற்பட்ட முறுகலொன்றின் போது வன்முறையாளராக செயற்பட்டுள்ளார்.

'என்னைத் தவிர வேறொரு நபருடன் தொடர்புகொண்டால் உன்னை கத்தியால் குத்தி கொலைசெய்வேன்' என்று கூறி இவர் தனது மனைவியான மேகனிடம் சண்டையிடும் காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அவர் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரும் நிலை ஏற்பட்டது.

இச்சம்பவமே 2015 ஆம் ஆண்டின் பிரபல தந்தைக்கான போட்டியிலிருந்து இவரது பெயர் நீக்கப்படுவதற்கு காரணமாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டேன் ஒஸ்போர்ன் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக்காக பெண்களுக்கான உதவி நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிலாரி பிஸர், தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வீட்டு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இவ்வாறான விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவது தொடர்பில் நாங்கள் பொருப்பு கூற வேண்டியுள்ளதாக அவர் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.

பெண்களை உடலியல் ரீதியாகம் உணர்வு ரீதியாகவும் வாய்மொழியூடாகவும் துன்புறுத்தக்கூடியவர்கள் சிறந்த தந்ததையாக இருக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தொலைக்காட்சி தயாரிப்பாளரான சிமன் கோவெலும் கால்பந்தாட்ட வீரரான டேவிட் பெக்கமும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த தந்ததை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .