2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

கொல்லைப்புறத்தில் நீலக்கல் கொத்து

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல இரத்தினக்கல் கொத்து ஒன்று இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள வீடொன்றின் கொல்லைப்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினங்கள் நிறைந்த இரத்தினபுரி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிணறு தோண்டிய தொழிலாளர்களால் இந்தக் கல் கண்டுபிடிக்கப்பட்டதாக மாணிக்க வர்த்தகர் ஒருவர் கூறினார். 

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர்கள் (2,000 கோடி இலங்கை ரூபாய்) வரை மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொத்து, சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் காரட் எடையைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு "செரண்டிபிட்டி சபையர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. "

கிணற்றைத் தோண்டிய தொழிலாளர்கள், சில அரிய கற்களைப் பற்றி தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட வர்த்தகர், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது முழு பெயரையோ அல்லது இடத்தையோ தெரிவிக்க விரும்பவில்லை. 

மூன்றாம் தலைமுறை இரத்தின வர்த்தகரான அவர், இந்த கண்டுபிடிப்பைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  அதிகாரிகள், கல்லைப் பகுப்பாய்வு செய்து சான்றளிப்பதற்கு முன்பு மண் மற்றும் சேறு ஆகியவற்றைச் சுத்தம் செய்ய சுமார் ஒரு வருடத்துக்கும்  மேலான காலம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .