2022 ஜனவரி 18, செவ்வாய்க்கிழமை

மின்சாரத்துக்கு நிவாரணக்காலம்?

Nirosh   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல்களின் மின்சார கட்டணத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிவாரணத்தை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதுத் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மின்சாரத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு  மின்கட்டணத்தை செலுத்துவதற்கான நிவாரணக் காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. 

இதுத் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து தன்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும், சுற்றுலாத்துறையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லும் எனவும் அமைச்சர் பிரசன்ன கூறியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X