Freelancer / 2021 ஜூலை 26 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதான மாணவியொருவரை தலங்கம, கிம்புலாவல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 49 வயதான மாற்றுத்திறனாளி ஆசிரியரைக் கைதுசெய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
லண்டனில் வசித்து வரும் மாணவியின் மாமி, சில புத்தகங்களைப் பெற விரும்புவதாக மாணவியிடம் கூறியுள்ளார்.
அந்தப் புத்தகங்களை கொள்ளுப்பிட்டி பகுதியில் இருந்து வாங்க உதவுவதாகக் கூறிய சந்தேகநபரான ஆசிரியர், மாணவியை ஏமாற்றி தனது காரில் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஒன்லைன் வகுப்புகளை முடித்த பின்னர், ஆசிரியருடன் புத்தகங்களை வாங்கப் போவதாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார்.
கம்பஹாவிலிருந்து மாணவியை காரின் முன் இருக்கையில் அழைத்துச் சென்று காரை கிம்புலாவல வாகன நிறுத்துமிடத்தில் ஆசிரியர் நிறுத்தியுள்ளார்.
பின்னர், காரின் பின்பக்க ஆசனத்துக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 hours ago
8 hours ago
9 hours ago