2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொடுப்பார் என்றால், அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (22) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சரணடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கு சென்றுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கப் போவதாக கூறுகின்றார்.

அப்படி என்றால் கண் கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார் எனவும் அவர் தெரிவித்தார், கொல்லப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்கள் என்றால், ​​கொன்றவர்களுக்கு என்ன தண்டனையை கொடுப்பீர்கள் என்றும் வினவினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X