2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

’பிரச்சினைகள் தீர்க்கப்படுவது அவசியம்’

J.A. George   / 2019 ஜூலை 23 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை முதல் நுவரெலியா கந்தப்பளை வரையான நாட்டின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களில் தொல்பொருள் திணைக்களம் சார்ந்து அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பிரச்சினைகள் காரணமாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நிலையியற் கட்டளை 27/2 கேள்வி நேரத்தின் போது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேள்வி எழுப்பிய போது இந்த விடயங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

மேலும்,  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சார்ந்து பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு, அத்தகைய எந்தவொரு பிரச்சினைக்கும் இதுவரையில் தீர்வுகள் எட்டப்படாத நிலையே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இத்தகைய பிரச்சினைகள்  தமிழ் மக்களுக்கு உணர்வு ரீதியிலான தாக்கங்களையும், வாழ்வாதார மற்றும் வாழ்விடங்களுக்கான கேள்விக்குறியினையும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், இப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது மிகவும் அத்தியவசியமாக உள்ளதாவும் அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .