2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

கோட்டாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இடைக்கால தடை

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டிருந்த நோட்டீசை இரத்துச்செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை இன்று (24) பிறப்பித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய  இருவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியமையால் கோட்டாபயவுக்கு குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தன்னால் அங்கு ஆஜராக முடியாது என, கோட்டாபய ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட  திபாலி விஜேசுந்தர மற்றும் அசல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள், இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், குறித்த மேன்முறையீட்டின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசெம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X