Freelancer / 2023 மார்ச் 31 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதித்துறை மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவின் பின்னர் நீதித்துறைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் தேவையற்ற மோதலை உருவாக்க நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீதிச் சேவைகள் சங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் இறையாண்மை அதிகாரங்களை செயற்படுத்தும் மூன்று முக்கிய நிறுவனங்களான பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையே சமநிலை பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. (a)
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026