2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

சிறுபான்மைக் கட்சிகளைப் பாராட்டினார் விஜித

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது சிறுபான்மைக் கட்சிகளின் செயற்பாட்டை பாராட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்சா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தின் போது தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும் அவரைச் சுற்றி இருக்கும் ஓநாய்களுடன் ஒன்றாகப் பயணிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

மஹிந்தவின் ஆட்சியின் போது தனக்கு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனினும் நல்லாட்சியில் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. நாம் 200 குளங்களை அமைத்தோம் என்றும் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஆளுங்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டப் பின்னர் உரையாற்றும் போதே  விஜித் விஜேமுனி சொய்சா இவ்வாறு தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X